Latestமலேசியா

TVET செயற்குழுவிற்கு தலைவராக நூருல் இஸ்ஸா சரியானவர் அல்ல

கோலாலம்பூர், ஜூன்.22- அண்மையில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட (TVET) மலேசிய தொழிற்திறன் பயிற்சிக் கல்வியை மேம்படுத்தும் செயற்குழுவிற்கு பெர்மாத்தாங் பாவோ நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸ்ஸா அன்வார் சரியானவர் அல்ல என்று (NUTP) தேசிய ஆசிரியர் தொழில் சங்கம் கூறியுள்ளது.

அந்த பொறுப்பை ஆக்ககரமாக செய்வதற்கு நூருல் இஸ்ஸா அமைச்சர் பதவியைக் கொண்டிருக்கவில்லையென தேசிய ஆசிரியர் தொழில் சங்கத்தின் தலைவர் கமாரோசாமான் அப்துல் ரசாக் தெரிவித்தார். அமைச்சர் பதவி வகிப்பவரால் மட்டுமே பிரச்சனைகளை அமைச்சரவைக்கு கொண்டுச் செல்ல முடியும் என்றார் அவர்.

அதனால், நூருல் இஸ்ஸாவுக்கு பதில் துணைப் பிரதமர் டாக்டர் வான் அஸிஸா அச்செயற்குழுவிற்கு தலைவராகலாம் எனவும் அவர் பரிந்துரை செய்தார்.

“தொழிற்திறன் பயிற்சிக் கல்வியை நிர்வகிப்பதில் ஏழு அமைச்சுகளுக்கு பங்குண்டு. ஆனால் அதற்கு மட்டும் தலைமையேற்க ஓர் அமைச்சினாலும் முடியாது. எனவேதான் வான் அஸிஸாவை நாங்கள் பரிந்துரைக்கிறோம்” என கமாரோசாமான் மேலும் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker