Latestமலேசியா

அந்நிய சமையல்காரர்களுக்குத் தடையா? – உணவக உரிமையாளர்கள் ஆட்சேபம்

பெட்டாலிங் ஜெயா, ஜூன்.23- உணவகங்களில் அந்நிய சமையல்காரர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது எனும் மனிதவள அமைச்சின் உத்தரவுக்கு உணவக உரிமையாளர்கள் ஆட்சேபனைத் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே உணவகங்களில் ஆள் பற்றாக்குறைப் பிரச்சனை இருக்கிறது. இந்நிலையில், மனிதவள அமைச்சு இப்படியொரு தடையை விதித்திருப்பது தங்களின் தொழிலை மிகவும் பாதிக்கும் என அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், பொதுவாக உள்நாட்டினர் உணவகங்களில் வேலை செய்ய விரும்புவதில்லை; அப்படியே வேலைக்குச் சேர்ந்தாலும் சில நாட்களிலேயே நின்றுவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசாங்கம் வழங்கியுள்ள ஆறு மாத கால அவகாசத்திற்குள் அந்நிய சமையல்காரர்களை வேலையில் இருந்து நிறுத்திவிட்டு, உள்ளூர் சமையல்காரர்களை வேலைக்கு எடுப்பது சாத்தியமற்ற காரியம் எனவும் உணவக உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker