Latestமலேசியா

உணவகங்களில் உள்ளூர் சமையல்காரர்கள் ஜன.1-முதல் அமல்!

பெட்டாலிங் ஜெயா, ஜூன்.23- அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி நாட்டிலுள்ள அனைத்து உணவகங்களில் உள்ளூர் சமையல்காரர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட வேண்டும் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் அறிவித்துள்ளார்.

இதனை செயல்படுத்த உணவக உரிமையாளர்களுக்கு கால அவகாசம் நிச்சயம் வேண்டும். அதனை கருத்தில் கொண்டே அவர்களுக்கு ஆறு மாத அவகாசம் வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

அவகாசம் வழங்கப்பட்டும் இன்னும் வெளிநாட்டு சமையல்காரர்களையே வேலைக்கு வைத்திருந்தால் சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவும், உள்நாட்டு உணவுகளின் தரத்தை உறுதிச் செய்வதற்காகவும் மனிதவள அமைச்சு இந்த முடிவை எடுத்ததாக குலசேகரன் கூறினார்.

பினாங்கு மாநில உணவகங்களில் அந்நிய நாட்டு சமையல்காரர்களுக்கு 2014-கிலேயே தடை விதிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker