Latestமலேசியா

சமையல்காரர்களுக்கு தடையா? இன்னும் முடிவாகவில்லை! -குலா

கோலாலம்பூர், ஜூன்.23- உள்நாட்டு உணவகங்களில் வெளிநாட்டு சமையல்காரர்கள் வேலைக்கு அமர்த்தப்படக் கூடாது எனத் தடை விதிக்கும் திட்டமானது இன்னமும் ஆலோசனை நிலையில் மட்டுமே இருந்து வருவதாக மனித வள அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புக்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே அதுவொரு கொள்கைத் திட்டமாகக் கொண்டு வரப்படும் என்று அவர் சொன்னார்.

வெளிநாட்டு சமையல்காரர்களை வேலைக்கு எடுப்பதற்கான தடை அமல்படுத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. இதில் தொடர்புடைய அனைத்து தரப்புகளுடனும் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது என்று குலசேகரன் குறிப்பிட்டார்.

அன்னிய நாட்டு சமையல்காரர்களை அமர்த்துவதற்கு
உள்நாட்டு உணவகங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்ட பின்னர், சமூக ஊடகங்களில் இது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

மேலும் இதுவொரு வகையான பீதி நோய் என்றும் அன்னியர்களைக் கண்டால வெறுக்கும் தன்மையை கொண்டது என்றும் பலர் சமூக ஊடகங்களில் விமர்சித்துள்ளனர்.

ஜனவரி முதல் உள்ளூர்க்காரர்களைத் தான் உணவக சமையல் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று குலசேகரன் கூறியதாக தகவல் வெளியானது. இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம் மற்றும் இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker