Latestமலேசியா

ஜூலை 16 : 14-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடக்கம்

கோலாலம்பூர், ஜூன்.23- 14-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூலை 16-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 20 நாட்களுக்கு நடைபெறவுள்ள அந்த கூட்டத் தொடர் குறித்து கடந்த திங்கட்கிழமை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டு விட்டதாக மக்களவைச் செயலகம் தெரிவித்தது.

அக்கூட்டத் தொடர் தொடங்கப்பட்டதும் முதலில் மக்களவை சபாநாயகர் நியமிக்கப்படுவார்.

சபாநாயகர் நியமனத்தை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு நடைபெறும். அதன் பிறகு, துணை சபாநாயகர் நியமனம் இடம்பெறும்.

ஜூலை 17-ஆம் தேதி, காலை 10 மணிக்கு மாமன்னர் 5-வது சுல்தான் முகமட் கூட்டத் தொடரை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker