Latestமலேசியா

தே.முவிலிருந்து விலகுவதாக கெராக்கான் கடிதம் தரவில்லை! – ஸாஹிட்

கோலாலம்பூர், ஜூன்.23- தேசிய முன்னணி கூட்டணியில் இருந்து விலகுவதாக கெராக்கான் இன்னும் அதிகாரப்பூர்வ கடிதத்தை வழங்கவில்லை என தேசிய முன்னனியில் இடைக்கால தலைவர் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

அதனால், இது குறித்து கெராக்கான தலைமைத்துவத்திடம் விளக்கமாக தகவல் பெறுவாமாறு தாம் தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் துங்கு அட்னானைப் பணித்துள்ளதாக அவர் சொன்னார்.

இன்று நடைபெற்ற தனது கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்திற்கு பின்னர் தேசிய முன்னணியில் இருந்து விலகுவதாக கெராக்கான் பகிரங்கமாக அறிவித்திருந்ததை அடுத்து, ஸாஹிட் இவ்வாறு கருத்துரைத்தார்.

இதனிடையே, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஒரு தொகுதியைக் கூட வெற்றிக் கொள்ளாத கட்சிகளை வெளியேற்றும் எண்ணம் தேசிய முன்னணிக்கு இல்லவே இல்லை என்று குறிப்பிட்ட ஸாஹிட், தேசிய முன்னணி தனது உறுப்பு கட்சிகளுக்கு மதிப்பு கொடுக்கும் கட்சியாகவே இத்தனை காலமாக செயல்பட்டு வருகிறது என்பதனைச் சுட்டிக் காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker