Latestமலேசியா

அடுத்த வாரம் அமைச்சர்கள் பட்டியல் அறிவிப்பு!

குவாந்தான், ஜூன்.24 -எஞ்சியுள்ள அமைச்சரவை பட்டியல் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகச் செயலாளர் டத்தோ சைபுடின் அப்துல்லா கூறினார்.

“அமைச்சரவை பட்டியல் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு அது மாமன்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கேள்வியுற்றேன். அந்தப் பெயர் பட்டியலில் யாரின் பெயர் இடம்பெற்றுள்ளது என்பது குறித்து எனக்குத் தெரியாது.

அடுத்த வாரம் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும்,” என நேற்று இண்ட்ரா மக்கோத்தாவில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் நோன்பு பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதோடு, அவர் வெளியுறவு அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது உண்மையா என வினவப்பட்ட போது, சைபுடின் அதனை மறுத்தார்.

இதனிடையே, இதுவரை 12 அமைச்சர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் பெயர் பட்டியல் மாமன்னரின் ஒப்புதலுக்காக அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker