Latestவிளையாட்டு

இங்கிலாந்து அதிரடியில் பனாமா பலி!

மாஸ்கோ, ஜூன். 24- உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் ‘ஜி’ பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்து குழு தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பனாமா குழுவை 6-1 என்ற கோல்கணக்கில் தகர்த்தது இங்கிலாந்தின் கேப்டன் ஹர்ரி கேன் இந்த ஆட்டத்தில் 3 கோல்களை அடித்தார்.

முற்பகுதி ஆட்டத்திலேயே இங்கிலாந்து 5-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகித்தது. 8ஆவது நிமிடத்தில் தற்காப்பு ஆட்டக்காரர் ஸ்டோன் ஒரு கோலைப் போட்டு கணக்கைத் தொடக்கி வைத்தார்.

அதன் பின்னர் 22ஆவது நிமிடத்தில் பெனால்டி மூலம் ஹர்ரி கேன் ஆவது கோலைப் போட்டார். அடுத்து 36ஆவது நிமிடத்தில் லிங்கார்டும் 40 ஆவது நிமிடத்தில் ஸ்டோனும் 45 ஆவது நிமிடத்தில் ஹர்ரி கேனும் கோல்களை மாறி மாறி அடித்து பனாமா சிதறடித்தனர்.

பிற்பகுதி ஆட்டத்தின் 62ஆவது நிமிடத்தில் ஹர்ரி கேன் தனது 3ஆவது கோலை அடித்தார். உலகக் கிண்ண இறுதிச்சுற்றில் இங்கிலாந்து 6 கோல்கள் அடித்திருப்பது இதுவே முதன் முறையாகும். இரண்டு வெற்றிகளைக் குவித்துள்ள இங்கிலாந்து இதன் வழி அடுத்த சுற்றுக்கு தேர்வு பெற்றுள்ளது.

அதேவேளையில் இந்த ஆட்டத்தில் படுதோல்வி கண்டாலும் பனாமா உலகக்கிண்ண இறுதிச் சுற்றில் முதன் முறையாக ஒரு கோலை அடித்து சாதனயைப் பதிவு செய்திருக்கிறது. பனாமாவின் கேப்டனும் 37 வயதுடைய மூத்த வீரருமான பாலோய் 78 ஆவது நிமிடத்தில் இந்தக் கோலை அடித்த போது பனாமா ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker