Latestமலேசியா

சித்தி காசிம் விடுதலை! தடுப்புக் காவல் மனு தள்ளுபடி

காஜாங், ஜூன். 24- பிரபல மனித உரிமை வழக்கறிஞரான சித்தி காசிமை தடுத்து வைக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பு செய்து கொண்ட மனுவை காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்ததோடு அவரை விடுவிக்க உத்தரவிட்டது..

தன்னுடைய கட்சிக்காரர் ஒருவரை கடத்தியதாக நேற்று சித்தி காசிம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இன்று காலையில் கைதிகளுக்கான ஆரஞ்சு நிற லாக்-அப் உடை அணிவிக்கப்பட்டு, கைவிலங்கிடப்பட்டு ஐந்து போலீஸ்காரர்களால் அவர் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் மற்றும் வழக்கறிஞர் அம்பிகா ஶ்ரீனிவாசன் உள்பட 10க்கும் அதிகமான வழக்கறிஞர்கள், சித்தி காசிம் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவதற்காக நீதிமன்றத்தில் காத்திருந்தனர்.

நீதிமன்றத்தில் தடுப்புக் காவல் மனு குறித்து விசாரித்த பின்னர், போலீஸ் தரப்பின் அந்த மனுவை மாஜிஸ்திரேட் நிராகரித்தார் என நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் அம்பிகா ஶ்ரீனிவாசன் தெரிவித்தார். இந்த வழக்கில் 12 வழக்கறிஞர்கள் சித்தி காசிமிற்காக ஆஜராயினர்.

தன்னுடைய தாயாரினால் தாக்கப்பட்டு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரை மருத்துவமனையில் இருந்து சித்தி காசிம் கடத்திச் சென்றதாக நேற்று காஜாங் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

தன்னுடைய தாயாரால் கொடுமைக்கு உள்ளானதாக நம்பப்படும் அனிஸ் ருஸ்லான் என்ற 24 வயதுடைய பெண்ணின் தாயார், தன்னுடைய மகள் கடத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்ததால் அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கமான நடைமுறைக்கு ஏற்பத் தம்மை கைது செய்ததாக சித்தி காசிம் அவருடைய நண்பர்களிடம் கூறியதாக தெரிய வந்துள்ளது.

மேலும் சித்தி காசிம் தம்மைக் கடத்தவில்லை என்று அனிஸும் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன. அனிஸ் தன்னுடைய கட்சிக்காரர் எனப்தால அவருக்கு பாதுகாப்பு அளிக்கவே அவரை சித்தி காசிம் அழைத்துச் சென்றதாக தெரிகிறது.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker