Latestமலேசியா

தேய்ந்து வரும் தே.மு.வுக்கு பதிலாக புதிய கூட்டணி! -ஸாஹிட் ஹமிடி

கோலாலம்பூர், ஜூன்.24- தேசிய முன்னணி நாளுக்கு நாள் தேய்ந்து வரும் நிலையில், இதர இனக் கட்சிகளை உள்ளடக்கிய புதிய பல இனக் கூட்டணியை உருவாக்குவது குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளார் தேசிய முன்னணியின் இடைக்காலத் தலைவரான டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி.

நேற்று பாரிசானின் பங்காளிக்கட்சியான கெராக்கான் அதை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே சரவாவைச் சேர்ந்த 4 பங்காளிக் கட்சிகள் வெளியேறி விட்டன. இதனால், 9 கட்சிகளின் கூட்டணியாக இருந்த பாரிசானில் அம்னோ, மசீச மற்றும் மஇகா என மூன்று கட்சிகள் மட்டுமே உள்ளன.

பல்வேறு கட்சிகளைக் கொண்ட புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து ஆராய்வதற்கு அம்னோ உச்சமன்றம் மற்றும் அம்னோ டிவிசன்களின் அதிகாரத்தை பெற நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று ஸாஹிட் ஹமிடி சொன்னார். அதே வேளையில் கூட்டணியின் பெயரை மாற்றுவது குறித்தும் ஆராயப்படும் என்றார் அவர்.

இனத்தின் அடிப்படையில் மட்டுமே ஏதாவதொரு அரசியல் கட்சி அல்லது கூட்டணி செயல்பட முடியாது என்ற உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நாம் பல இன சமுதாயத்தில் வாழ்கிறோம். அம்னோ ஒரு மலாய்க்காரர்கள் கட்சியாக இருந்தாலும் இதர இனங்களைச் சார்ந்த கட்சிகளின் ஓத்துழைப்புடன் செயல்படவேண்டியுள்ளது. எல்லா இனங்களையும் கொண்ட ஒரே சக்தியாக நாம் செயல்பட்டாக வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker