Latestமலேசியா

தே.மு.வை விட்டு பகான் செராய் எம்பி. விலகல்: மகாதீருக்கு ஆதரவு

பாகான் செராய், ஜூன்.24- பாகான் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் நோர் அஸ்மி காஸாலி தேசிய முன்னணியில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இனி தாம் தன்னிச்சையாக இருந்து துன் மகாதீர் தலைமையிலான நடப்பு அரசாங்கத்துக்கும், பேராக் மந்திரி புசார் அகமட் பாய்சாலுக்கும் ஆதரவாக செயல்படப் போவதாக அவர் கூறியுள்ளார்.

தாம் எடுத்திருக்கும் இந்த முடிவு தனக்கும் மட்டுமில்லாமல், பாகான் செராய் மக்களுக்கும் பொருள் பொதிந்ததாக அமையும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

“இந்த முடிவை நான் அவ்வளவு எளிதில் எடுக்கவில்லை. பாகான் செராய் மக்களின் நலன் கருதியே இந்த முடிவை எடுத்தேன்” என அவர்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker