Latestஇந்தியா

உணவுத் தட்டுக்காக மோதல்: திருமண வீடு- மரண வீடானது!

லக்னோ, ஜூன் 25- உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமண விருந்தொன்றில் உணவுத் தட்டுகள் இல்லாததால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியது.

திருமண விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு பரிமாறுவதற்கு உணவுத் தட்டுகள் இல்லாமல் போனதால் வாய்த் தகராறு ஏற்பட்டது.
இந்த வாய்த்தகராறு சண்டையாக மாறியதில் விஷால் எனும் இளைஞர் பலியானார்.

மேலும் 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உணவுத் தட்டுக்காக ஏற்பட்ட சண்டையில் திருமண வீடு மரண வீடாக மாறியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker