Latestஉலகம்

உலகின் மிக இளமையான கோடீஸ்வரர் இவர்தான்..!

லண்டன், ஜூன்.25- 2018 ஆம் ஆண்டு அனைத்துலக அளவில் உள்ள பில்லியனர்கள் யார் என்ற பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் புதிதாக 437 பில்லியனர்கள் இடம் பெற்று இருந்தாலும் உலகின் இளமையான கோடீஸ்வரர் என்ற பெருமையினை நார்வேயைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா ஆண்ட்ரெஸ்சன் பெற்றுள்ளார்.

21 வயதான அலெக்ஸாண்ட்ரா ஆண்ட்ரெஸ்சனுக்கு 2007 ஆம் ஆண்டு அவரது தந்தையின் முதலீட்டு நிறுவனத்தில் இருந்து 42 சதவீத பங்குகள் கிடைத்துள்ளது. அதனை வைத்து இவர் தொழில் செய்து பில்லியனர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

முதல் தலைமுறையாக பில்லியனர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஸ்டிரைப்ஸ் பேமெண்ட்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் தலைவரான ஜான் காலிசன் தன்னுடைய சொந்த உழைப்பில் 12 பில்லியன் டாலர்களுடன் இணைந்துள்ளது முக்கியமானதாகும்.

சென்ற வருடம் வெளியிடப்பட்ட பில்லியனர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்களில் 27 நபர்கள் இறந்துள்ளனர். இறந்ததில் இளமையானவர் என்றால் கோன் பார்ப்ரேஷன் நிறுவனத்தின் தலைவரான 53 வயது நிக்கலாஸ் ஹெரால்ன் ஆவார்.

பில்லியனர்கள் அனைவரின் சராசரி வயது 63 என்றும் இது சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது பட்டியல் ஒரு வயது இளமை அடைந்துள்ளது என்றும் வர்ணிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker