Latestமலேசியா

போலீஸ் மீதான புகார் பிரிவை அமைக்க வேண்டும் – லிம் கிட்

கோலாலம்பூர், ஜூன்.25- போலீஸ் மீதான புகார் மற்றும் போலீசின் தவறான நடத்தை மீதான சுயேட்சை ஆணையமான, ‘ஐபிசிஎம்சி’ யை உடனடியாக அமைக்க வேண்டும் என லிம் கிட் சியாங் மீண்டும் அறிவுறுத்தினார்.

வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான சித்தி காசிம் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் பக்காத்தான் ஹராப்பான் அரசிடம் இந்தப் பரிந்துரையை முன்வைத்தார்.

தனது கட்சிக்காரரான 24 வயது அனிஸ் இஸ்ஸாத்தி ருஸ்லான் தொடர்பில் செய்யப்பட்ட போலீஸ் புகாரை அடுத்து சித்தி காசிம் கைது செய்யப்பட்டிருந்தார்.

சித்தி மீதான இந்த தவறான கைது நடவடிக்கை, அரசாங்க சார்புடைய எல்லா துறைகளையும் பக்காத்தான் அரசு சீர்த்திருத்த வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளதாக லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.

மக்கள் போலீஸ் மீது தனி மரியாதை வைத்திருப்பவர்கள். அவர்களுக்கு வேண்டியது எல்லாம் குற்றச்செயல்களற்ற சூழலில் மனித உரிமை காக்கப்பட்டு வாழ வேண்டும் என்பதே. அதனால், போலீசார் தங்களின் கடமையைச் சரியாக செய்ய ஐபிசிஎம்சியை அமைப்பதுதான் சிறந்த வழி என அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker