Latestமலேசியா

மைக்கா விவகாரம்: விசாரணை நடத்தப்படும்? – குலசேகரன்

கோலாலம்பூர், ஜூன்.25- மலேசிய இந்திய சமூகத்தினருக்குச் சொந்தமான ரிம.100 மில்லியன் தொகை சார்ந்த மைக்கா முறைகேடு தொடர்பில் மீண்டும் விசாரணையை தொடங்கலாமா? என்று பக்காத்தான் அரசாங்கம் யோசித்து வருவதாக மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறியுள்ளார்.

முன்பு தாம் பிரதமராக இருந்த காலக் கட்டத்தில், அவ்விவகாரம் குறித்து தாம் பெரிதாக கருதவில்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஒப்புக் கொண்டதாக குலசேகரன் தகவல் தெரிவித்தார்.

“இந்திய மக்களின் பிரதிநிதியான முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலு அந்தப் பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில், தாம் அது குறித்து சட்டை செய்யவில்லை என்று மகாதீர் கூறினார்.

“ஆனால், மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டிய வேளையில், தாம் அந்தப் பிரச்சனையில் தலையிடாமல், தவறிழைத்து விட்டதை மகாதீர் இப்போது உணர்ந்துள்ளார்.

அதனால், அந்த விவகாரம் குறித்து புதிய விசாரணை மேற்கொள்ளலாமா என்று நாங்கள் யோசித்து வருகிறோம்” என்று குலசேகரன் மலேசியாகினி பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய மைக்கா ஹோல்டிங்ஸ் விவகாரத்தில் மகாதீர் சம்பந்தப் பட்டுள்ளார் என்று பல ஆண்டுகளாக நிலவி வரும் கருத்தையும், குலசேகரன் மறுத்தார்.

“ஆமாம், அந்த நிறுவனம் தொடங்கப் படுவதற்காக மகாதீர் நிதி உதவி வழங்கினார். ஆனால், மக்களை ஏமாற்றுமாறு, மகாதீர் மஇகாவை கேட்டுக் கொள்ளவில்லை. இந்திய மக்களின் நலனுக்காக அவர் அந்த நிதியை வழங்கினார். ஆனால், அந்த நிதியானது ஏமாற்று வேலைக்காக பயன்படுத்தப்படும் என்று அவர் கருதவில்லை” என்று குலசேகரன் பதிலளித்தார்.

1982-ஆம் ஆண்டில், இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியர்கள் பங்கேற்கவும், அப்போதைய மஇகா தலைவர் துன் சாமிவேலுவால் மைக்கா ஹோல்டிங்ஸ் உருவாக்கப்பட்டது.

எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் மக்கள் பலர், அந்தப் பங்குகளை வாங்குவதற்காக, தங்களின் சொத்துகளை அடமானம் செய்தனர். ஆனால், அந்தப் பங்குகள் இழப்பைச் சந்தித்து, முதலீட்டாளர்கள் பலர் (மக்கள் உட்பட) அந்தக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் திவாலானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker