Latestமலேசியா

1எம்டிபி: நஜிப் மறுப்பு அறிக்கை விடுப்பது ஏன்? –டோனி புவா

கோலாலம்பூர், ஜூன்.25- இதுநாள் வரை, 1எம்டிபி நிதி முறைக்கேடு விவகாரத்தில் தமக்கு சம்பந்தம் இல்லை என்றும், அதனால், தம்மால் அது குறித்து ஏதும் கருத்துரைக்க முடியாது என்றும் கூறி வந்த முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப், இப்போது பதிலுக்கு பதில் அது குறித்து மற்றுப்பு அறிக்கைகள் விடுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

தனது வங்கிக் கணக்கிற்கு, 1எம்டிபியின் நிதி என்று நம்பப்படும் குறிப்பிட்ட தொகையானது பரிமாற்றம் செய்யப் பட்டது தொடர்பில் தம்மால் எவ்வித கருத்தும் தெரிவிக்க முடியாது என்றும், அவ்வாறு செய்வது தவறு என்றும் கடந்த மே மாதம் 28-ஆம் தேதியன்றும் நஜிப் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

ஆனால், டி.ஆர்.எக்ஸ்.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ரிம.3 பில்லியன் தொகையை, 1எம்டிபி உபயோகிக்கவில்லை என்று அவர்தான் உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார். 1எம்டிபி இதர நிறுவனங்களுக்கு செலுத்திய கடன் தொகை போன்றவை குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அப்படியென்றால், 1எம்டிபி நிறுவனத்தின் பரிவர்த்தனைகள் குறித்து நஜிப் நன்கு அறிந்துள்ளார் என்று தானே அர்த்தம் என்று டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா கூறினார்.

“1எம்டிபி விவகாரம் குறித்து கருத்துரைக்கலாமா, இல்லையா என்பது குறித்து நஜிப் முடிவெடுக்க வேண்டும். இதுவரை தம்மால் கருத்துரைக்க முடியாது என்று கூறி வந்த அவர், அந்த நிறுவனம், பண்டார் மலேசியா மற்றும் துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் கட்டுமானத் திட்டங்களின் நிதியை உபயோகித்துள்ளது என்ற தகவலை உடனே ‘மறுப்பு அறிக்கை’” வெளியிடுகிறார்.

“அப்படியென்றால், 1எம்டிபி நிறுவனத்தின் பரிவர்த்தனைகள் குறித்து அவருக்கு அனைத்து தகவல்களும் தெரியும் என்று தானே அர்த்தப் படுகிறது? 1எம்டிபி நிதி முறைக்கேடு விவகாரத்தில் தமக்கு சம்பந்தமில்லை என்று கூறி, அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது பழிபோடும் நஜிப், அந்த நிறுவனத்தின் பரிவர்த்தனைகள் குறித்து விரிவான தகவல்களை எவ்வாறு அறிந்திருக்கிறார்?” என்று புவா கேள்வி எழுப்பினார்.

அண்மையில், டி.ஆர்.எக்ஸ்.சி நிறுவனத்தின் ரிம.3 பில்லியன் தொகை, 1எம்டிபி கடனை செலுத்துவதற்காக உபயோகிக்கப் பட்டுள்ளது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் அறிக்கையில் தெரிவித்தார்.

ஆனால், லிம் குவான் எங்கின் அந்த அறிக்கையில் உண்மையில்லை என்றும், 1எம்டிபி நிறுவனம், டி.ஆர்.எக்ஸ்.சி நிறுவனத்திடமிருந்து பெற்ற அந்தக் கடனை, கடந்தாண்டு மார்ச்சு மாதம் 31-ஆம் தேதியன்று செலுத்தி முடித்து விட்டது என்று நஜிப் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker