Latestமலேசியா

GLC நிறுவன உயர் அதிகாரிகள் பணி நீக்கம் – பேரா அரசு

ஈப்போ, ஜூன்.25- அரசாங்க சார்புடைய நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரிகள் எழுவரை மாநில அரசாங்கம் பணி நீக்கம் செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனம் வரவு செலவுக்கு மீறி செலவு செய்து வந்தது கண்டறியப்பட்டதால், தே.மு அரசால் நியமிக்கப்பட்ட அந்த அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக மந்திரி புசார் அகமட் பாய்சால் அஸுமு தெரிவித்தார்.

அந்நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி பதவி விலகியதை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நீக்கப்பட்டுள்ளனர்.

அவர்களைப் பணி நீக்கம் செய்ததன் மூலம், மாநில அரசால் மாதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டையும், ஆண்டுக்கு 16 லட்சம் ரிங்கிட்டையும் சிக்கனப்படுத்த முடியும் என பாய்சால் அஸுமு சுட்டிக் காட்டினார்.

லாபம் இல்லாத அந்நிறுவனத்தில் அவசியமில்லாத நியமனங்களால் அளவுக்கு மீறி செலவு செய்யப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றார் அவர். எனினும், அந்நிறுவனத்தின் பெயரை அவர் குறிப்பிட மறுத்து விட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker