Latestமலேசியா

இந்தியர்கள் பிரச்சனை: தேசிய பிரச்சனை! –வழக்கறிஞர்கள்

கோலாலம்பூர், ஜூன்.26- நாட்டிலுள்ள இந்தியச் சமூக பொருளாதார பிரச்சனைகளை களைய ஒட்டு மொத்த அமைச்சரவை பாடு பட வேண்டும். முந்தைய அரசாங்கத்தைப் போல், இந்தியத் தலைவர்கள் தான் அச்சமூகத்தின் பிரச்சனைகளை களைய வேண்டும் என்று புதிய அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கக் கூடாது என்று ‘லாயர்ஸ் போர் லிபர்டி’ எனப்படும் சுதந்திரத்திற்கான வழக்கறிஞர்கள் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் மக்கள் எதிர்நோக்கும் சமூக பொருளாதார பிரச்சனைகளை இன அடிப்படையில் பிரித்து பாராமல், ஒரே கண்ணோட்டத்தின் கீழ் ஆராய்ந்து, அப்பிரச்சனைகளை அரசாங்கம் களைய வேண்டும் என்று சுதந்திரத்திற்கான வழக்கறிஞர்கள் அமைப்பின் நிர்வாக இயக்குநர் லத்தீபா கோயா அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது, இந்தியச் சமூதாயத் தேவைகளை பூர்த்தி செய்ய குறிப்பிட்ட சில இந்தியத் தலைவர்களை நியமித்தது. ஆனால், அந்த நியமன்ங்களால் இந்திய மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.

தேசிய முன்னணியைப் போன்று, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் செயல் படக் கூடாது, இந்தியர்களும் நாட்டின் பிரஜைகள். அவர்களின் பிரச்சனைகள், நாட்டின் பிரச்சனையாகும் என்ற அடிப்படையில், அது குறித்து அமைச்சரவையில் கலந்தாது ஆலோசிக்கப் பட்டு, அப்பிரச்சனைகளுக்கான தீர்வை அனைத்து அமைச்சர்களும் வழங்க வேண்டும் என்று லத்தீபா வலியுறுத்தினார்.

செடிக் எனப்படும் இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டம் புத்துயிர் பெறும் என்றும், அதன் கீழ், இந்தியச் சமூகப் பிரச்சனைகள் களையப் படும் என்று நேற்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கருத்துரைத்ததை தொடர்ந்து, லாயர்ஸ் போர் லிபர்டி அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தியர்களின் குடியுரிமையை பிரச்சனைகளை களையும் பொறுப்பில் செடிக் (மைடப்தார்) ஈடுபட்டிருந்ததை சுட்டிக் காட்டி, அவர்களால் அப்பிரச்சனைக்கான தீர்வை தர முடியவில்லை என்று லத்தீபா சொன்னார்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், எதற்காக தேசிய முன்னணி அரசாங்கத்தின் வழியை பின்பற்ற வேண்டும்? இந்தியர்கள் என்று பாராமல், மக்கள் என்ற கண்ணோட்டத்தில் அப்பிரச்சனைகள் களையப் பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker