Latestமலேசியா

நஜிப் வீட்டில் எடுத்த பொருட்களின் மதிப்பு என்ன? நாளை அறிவிப்பு!

கோலாலம்பூர், ஜூன்.26 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு சொந்தமான வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு தொடர்பாக புக்கிட் அமான் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு இயக்குனரான டத்தோஸ்ரீ அமார் சிங் நாளை செய்தியாளர் சந்திப்பை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியாளர் கூட்டச் சந்திப்பு நாளை காலை 11 மணி அளவில் KPJ கட்டிடத்தில் உள்ள வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் நடைபெறும் என போலீஸ் தெரிவித்தது.

கடந்த மே 18ஆம் தேதி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் பெவிலியன் ரெஸிடெண்ட் ஆடம்பர அடுக்கு மாடி வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 72 பெட்டிகளில் ரொக்கம் மற்றும் நகைகள், ஆபரணங்களுடன், 284 பெட்டிகளில் விலைமதிப்பு மிக்க ஹேண்ட் பேக்குகள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கைப்பற்றப்பட்ட மொத்தப் பொருட்களை போலீஸ் இன்னமும் மதிப்பீடு செய்கின்றது என அமார் சிங் ஜூன் 14-ஆம் தேதி கூறியிருந்தார்.

பேவிலொயன் குடியிருப்பிலுள்ள நஜிப்பின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 37 பைகள் நிரம்ப 433 கைக்கரடிகாரங்கள் இருந்தன எனவும் அவற்றின் மொத்த மதிப்பு 80 மில்லியன் ரிங்கிட் என்றும் சைனா பிரஸ் பத்திரிக்கை நேற்று செய்தி வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker