Latestமலேசியா

பண அரசியலே அம்னோவின் பலவீனம்! – துங்கு ரஸாலி

கோலாலம்பூர், ஜூன்.26- அம்னோவில் வெகு காலமாகவே இருந்து வரும் பிரச்சனைகளில் ஒன்று பண அரசியல். அம்னோ தலைவர் பொறுப்பு தமக்கு கிடைத்தால், இந்த கலாசாரத்தை வேரோடு அழிப்பேன் என தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான மூத்தத் தலைவர் துங்கு ரஸாலி உறுதி அளித்துள்ளார்.

கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பில் இருப்பவர்களுடன் நெருங்கிய உறவு கொண்டிருப்பவர்களாயின் அவர்களுக்கு தனிச் சலுகைகள் வழங்குவது கட்சியில் இருக்கும் ஓர் இழிவான கலாசாரமாக இருந்து வருகிறது.

தங்களுக்கு கட்சி உறுப்பினர்களின் நீடித்த ஆதரவு இருக்க வேண்டும் எனும் சுயநலத்தினால் பண அரசியலில் விளையாடுகின்றனர் ஒரு சில தலைவர்கள் என துங்கு ரஸாலி சுட்டிக் காட்டியுள்ளார்.

எந்த வேலையும் செய்யாமல் இப்படித்தான் அதிகமான கட்சி உறுப்பினர்கள் சம்பாதித்துக் கொண்டிருப்பதாக அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த பண அரசியல் கலாசாரத்தால், புதியவர்கள் தலைமைத்துவ பொறுப்பிற்கு வருவது அரிதாகிறது. குறிப்பாக, கட்சியை சீர்த்திருத்த நினைக்கும் இளையோருக்கு தலைமைத்துவ மட்டத்தில் நிலவும் பண அரசியல் முட்டுக் கட்டையாக இருக்கிறது.

இந்த பண அரசியலை ஒழித்தால் மட்டுமே அம்னோவை மீட்க முடியும் என கூறியுள்ள துங்கு ரஸாலி தாம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், கட்சியில் கண்டிப்புடன் இருக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாரம் நடைபெறவுள்ள தலைவர் தேர்தலுக்காக தாம் ஒரு சென்னைக் கூட வெளியாக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில், பண அரசியல் நீண்ட காலத்துக்கு நன்மையைத் தரக்கூடியது அல்ல என அவர் நினைவுறுத்தியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker