Latestமலேசியா

‘Grab’ ஓட்டுனர் கொலை: மியான்மார் ஜோடி கைது

கோலாலம்பூர், ஜூன்.26 – கடந்த ஜூன் 23-ஆம் தேதி செலாயாங்கில் கொலை செய்யப்பட்ட ‘கிரேப்’ ஓட்டுனர் கொலை வழக்கில் மியான்மாரைச் சேர்ந்த ஆடவனையும் பெண்ணையும் போலீஸ் கைது செய்துள்ளது.

“20 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவனும் பெண்ணும் சம்பவம் நிகழ்ந்த அன்று அதிகாலை 1 மணியளவில் செலயாங்கில் உள்ள ஒரு பகுதியிலிருந்து சவாரிக்காக ஏற்றப்பட்டனர்.

இந்தக் கொலை தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்,” என கோம்பாக் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் தெய் கோங் செங் கூறினார்.

‘கிரேப்’ ஓட்டுனரான 27 வயது அய்மான் நோஸ்ரி கடந்த சனிக்கிழமை இரவு 8.20 அளவில் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்த நிலையில் அவரது புரோடுவா மைவி காரில் கண்டுப்பிடிக்கப்பட்டார்.

இதனிடையே, அய்மான் அவரது டி-சட்டையால் கழுத்து நெரிக்கப்பட்டதால் தான் மூச்சுத் திணறி இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker