Latestமலேசியா

1எம்டிபி ஊழலுக்கு நான் முக்கிய காரணமா? இல்லைவே இல்லை! – ரோஸ்மா

கோலாலம்பூர், ஜூன்.27- 1எம்டிபியின் ஊழல்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என  வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் (WSJ)-இன் புதிய குற்றச்சாட்டுக்கு ரோஸ்மா மன்சோர் பதில் அளித்துள்ளார்.  WSJ புனைந்துள்ள இந்த புதிய கதை தமது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்காகவே செய்யப்பட்ட ஒன்றென அவர் சாடியுள்ளார்.

WSJ வெளியிட்ட இந்த பரபரப்பான செய்தியின் எதிரொலியாக ரோஸ்மாவின் வழக்கறிஞர்களான டத்தோ கே.குமரேந்திரனும் டத்தோ கீதன் ராம் வின்சனும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

WSJ வெளியிட்டிருந்த செய்தியில் உள்ள அனைத்தையும் ஆராய்ந்தோம். டத்தின் ஶ்ரீ ரோஸ்மாவுக்கும் அவற்றுக்கும் துளி கூட சம்பந்தமில்லை. 1எம்டிபி நிறுவனத்தில் நிகழ்ந்த ஊழல்களில் டத்தின் ஶ்ரீ நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்படவே இல்லை. மேலும்,  டத்தோ ஶ்ரீ நஜிப் எடுத்திருந்த முடிவுகளுக்கும் ரோஸ்மாவுக்கும் கூட சம்பந்தமில்லை என மீண்டும் நினைவுறுத்துகிறோம்” என அவர்கள் தங்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது  1எம்டிபி ஊழல் விசாரணை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், அதில் எப்படியாவது ரோஸ்மாவை சிக்க வைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தினாலேயே இவ்வாறான சர்ச்சைக்குரிய செய்தியை WSJ வெளியிட்டிருப்பதாக அவர்கள் மேலும் விவரித்துள்ளனர்.

1எம்டிபி ஊழல் விவகாரத்தின் பின்னணியில் இருந்து அனைத்து வேலையையும் பார்த்தவர் ரோஸ்மாதான் என்றும் அவரது ஆதிக்கத்தில்தான் நஜிப் எல்லா முடிவுகளை எடுத்திருந்தார் எனவும் WSJ நேற்று செய்தி வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker