Latestமலேசியா

இனி 24 மணி நேர உணவகங்கள் 2 மணி நேரம் மூடப்பட வேண்டும் – MBPJ உத்தரவு

கோலாலம்பூர், ஜூன்.28 – அடுத்த மாதம் முதல் பெட்டாலிங் ஜெயாவில் செயல்பட்டு வரும் 24 மணி நேர உணவகங்கள் தங்களின் வியாபார நேரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் (MBPJ) புதிய விதிமுறையை விதித்துள்ளது.

“இனி 24 மணிநேர உணவகங்கள் கட்டாயமாக தினசரி இரண்டு மணி நேரம் அதாவது அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரை மூடப்படவேண்டும். இந்தப் புதிய விதிமுறையால் சிலாங்கூரில் உள்ள 98 உணவகங்கள் பாதிக்கப்படும். அதோடு, உணவகங்கள் சுத்தம் செய்ய மூடப்படுவதற்கான நோட்டிசும் வழங்கப்பட வேண்டும்,” என பெட்டாலிங் ஜெயா மேயர் டத்தோ முகமட் அஸிசி முகமட் சாயின் தெரிவித்தார்.

உணவகங்கள் சோதனையிடப்படும் போது அதன் உரிமையாளர்கள் சுத்தம் செய்ய நேரம் இல்லை போன்ற காரணம் கொடுக்காமலிருக்கவே பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம்  இந்த புதிய விதிமுறையை கொண்டு வந்ததாக அவர் சொன்னார்.

மேலும், ஏற்கனவே உயர் சுகாதார தர நிலைகளைக் கொண்டிருக்கும் ஹோட்டல் உணவகங்கள் மற்றும் 24 மணி நேர துரித உணவு கடைகளுக்கு இந்தப் புதிய விதிமுறைப் பொருந்தாது எனவும் முகமட் அஸிசி கருத்துரைத்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker