Latestஉலகம்

சக ஊழியர்கள் 21 பேரை விஷம் வைத்துக் கொன்றவர் கைது!

பெர்லின், ஜூன் 28- ஜெர்மனியில் 18 ஆண்டுகளாக சக ஊழியர்கள் 21 பேரின் உணவில் விஷம் கலந்து கொலை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த நபர் தொடர்பான,  கண்காணிப்பு கேமராவில் பதிந்த காட்சிகள் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஸ்லோஸ் ஹோல்டி நகரில் அமைந்துள்ள ஒரு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த வந்த 56 வயது நப, தமது சக ஊழியர்களை திட்டமிட்டு கொலை செய்துள்ளதாக தெரிகிறது. அவரது பெயர், அவர் பணி புரிந்த நிறுவனத்தின் பெயர் அல்லது பலியான நபர்களின் பெயர் என எதையும் போலீசார் வெளியிட மறுத்துள்ளனர்.

அந்த  நிறுவனத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் தமது உணவில் சந்தேகத்துக்குரிய வகையில் ஏதோ கலந்திருப்பதாக நிர்வாகத்தினரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார்  மேற்கண்ட விசாரணையில் கண்காணிப்பு கேமராவில் அந்தக் காட்சி பதிவாகியிருந்தது.

அந்த  நபரின் உணவின் மீது, கைதான சந்தேகப் பேர்வழி, தூள் போன்ற ஒரு பொருளை  தூவுகின்றார். இதனையடுத்து உணவை பரிசோதனையிட்ட அதிகாரிகள் அதில் விஷம் கலந்திருப்பதை உறுதி செய்தனர்.

கைதான நபரது குடியிருப்பில் இருந்து இரசாயன பொருட்களை போலீசார் கைப்பற்றினர். மட்டுமின்றி நீண்ட 18 ஆண்டுகளாக  அந்த நபர்உணவில் விஷம் கலந்து தமது சக ஊழியர்களை 21 பேரை கொலை செய்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது.

பெரும்பாலானோர் புற்றுநோய் அல்லது மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் மரணமடைந்து உள்ளனர். உணவில் இவர் கலந்துள்ள இரசாயன பொருட்களின் தாக்கமே இந்த இறப்புக்கெல்லாம் காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இருப்பினும் இந்த கொலைக்கான நோக்கம் என்ன என்பது தொடர்பில் அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker