Latestமலேசியா

‘புதிய மலேசியா’ உருவாக்கம்: பக்காத்தானுக்கு சிக்கல்! -டெனிசன்

கோம்பாக், ஜூன்.28- ‘புதிய மலேசியா’வை உருவாக்கும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு, இனம், சமயம் மற்றும் வாழ்க்கைச் செலஇனங்கள் தடையாக அமையும் என்று பேராசிரியர் டெனிசன் ஜெயசூரியா கருத்து தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை, குறிப்பாக, பி -40 வறுமை கோட்டின் கீழ் சிரமப்படும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவோம் என்று கடந்த பொதுத் தேர்தலின் போது பக்காத்தான் கூட்டணி வாக்குறுதிகளை வழங்கியது. அந்த வாக்குறுதிகளை அக்கூட்டணி நிறைவேற்ற வேண்டும் என்று டெனிசன் அறிவுறுத்தினார்.

“பக்காத்தான் மக்களுக்கு என்னென்ன நன்மைகளை செய்யவிருக்கிறது என்பதை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். முந்தைய அரசாங்கத்தின் கீழ், மலேசியர்களின் வாழ்க்கைச் செலவீன்ங்கள் அதிகரித்து விட்டன என்ற கருத்து மக்களிடையே நிலவியது.

“புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, ஜி.எஸ்.டி அகற்றப் பட்ட போதிலும், வாழ்க்கைச் செலவீனங்கள் குறைந்த பாடில்லை. மக்களின் மாத வருமானங்கள் அதிகரிக்கப் பட்டால் மட்டுமே, இதற்கான தீர்வை காண முடியும்” என்று சொன்னார்.

இதனிடையில், இனம் மற்றும் சமயத்தை கையில் எடுத்துக் கொண்டு அம்னோ மற்றும் பாஸ் கட்சியினர், மலாய்க்காரர்களின் ஆதரவை தங்கள் வசம் திருப்புகின்றனர். கிராமப் புறங்களில் உள்ள மலாய்க்காரர்களிடம் பிற மதத்தினரை நம்ப வேண்டாம் என்று இக்கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

அரசியல் அமைப்புச் சட்டத்தை, பக்காத்தான் அரசியல்வாதிகள் குறைத்து மதிப்பீடு செய்து விடக்கூடாது என்று டெனிசன் அறிவுறுத்தினார். மலாய்க்காரர்கள் அதிகம் உள்ள தொகுதிகளை தங்கள் வசப்படுத்த பக்காத்தான் கூட்டணி சிரமத்தை எதிர்நோக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

“இந்தத் தொகுதிகளுக்கு பக்காத்தான் அரசியல்வாதிகள் தோழமை அடிப்படையில் சோதனை மேற்கொள்ள வேண்டும். அங்கு வாழ் மக்களிடம் ஒற்றுமை குறித்து பேச வேண்டும்.

“மலாய்க்காரர்கள் தொகுதிகளுக்கு மலாய் அரசியல்வாதிகளையும், இந்தியத் தொகுதிகளுக்கு இந்திய அரசியல்வாதிகளையும் அனுப்புவது தேசிய முன்னணியின் கொள்கை. அதை பக்காத்தான் கூட்டணி பின்பற்றக் கூடாது” என்று அவர் வலியுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker