Latestசினிமா

மீண்டும் போலீசிடம் சிக்கிய நடிகர் ஜெய்!

சென்னை,ஜூன் 28- நுங்கம்பாக்கத்தில் அதிகமாக  இரைச்சலை எழுப்பிய காரில் பயணம் செய்த நடிகர் ஜெய் வாகனத்தை போலீசார் மடக்கினர்.

அதன்பின் நடிகர் ஜெய், அவரே அதிக ஒலி எழுப்பும் வாகனத்தை உபயோகிக்காதீர்கள் என்று அறிவுரை செய்த வீடியோ இப்போது பரவலாக மக்களால் பார்க்கப்படுகிறது.

நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் நடிகர் ஜெய் தனது டிரைவருடன் காரில் சென்றிருக்கிறார். அவரது காரின் சப்தம் அதிக ஒலியுடையதாக இருந்ததால் அவரது கார் போலீசாரால் மடக்கப்பட்டது.

“உங்கள் வாகனத்தில் அதிக சப்தம் வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்” என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதனை அடுத்து மன்னிப்பு கேட்ட நடிகர் ஜெய், உடனே அது பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்றிலும் நடிகர் ஜெய்யை பேச வைத்தனர்
அங்கிருந்த போக்குவரத்து போலீசார்.  அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

அதன்படி ‘இது என்னுடைய கார் என்று கூறும் ஜெய், இது போன்ற பெரும் சப்தம் வரும்படி உங்கள் வாகனம் இருந்தால் அதனை உடனே மாற்றிக் கொள்ளுங்கள். காரணம் இது போன்று சப்தத்துடன் உங்கள் வாகனம் ஒலியெழுப்பினால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும்” எனௐ கூறியுள்ளார்.

முன்னதாக நடிகர் ஜெய் குடித்து விட்டு வண்டி ஓட்டிய காரணத்திற்காக அவரது லைசென்ஸ் ஆறு மாதங்களுக்கு முடக்கி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker