Latestமலேசியா

HRDF கண்காணிப்பு செயற்குழுவுக்கு ஐவர் நியமனம்

கோலாலம்பூர், ஜூன்.28- மனிதவள மேம்பாட்டு நிதியம் (HRDF)-இன் நிர்வகிப்பைக் கண்காணிப்பதற்கு அமைக்கப்பட்ட சிறப்பு செயற்குழுவுக்குத் தலைமைத் தாங்க ஐவரை மனிதவள அமைப்பு நியமித்துள்ளது.

HRDF-இன் இயக்குநர் வாரியத்துக்கு உதவும் அதிகாரம் அச்செயற்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

MITI-இன் முன்னாள் தலைமைச் செயலாளர் ரேபேக்கா பாத்திமா, கடன் மீட்பு வல்லுநர் பியோனா சோ, வழக்கறிஞர் பாரி அஸ்ஸாட், கணக்காளர் எஸ்.தாமோதிரன், மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.நடேஸ்வரன் ஆகியோர் அச்செயற்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

சில தினங்களுக்கு முன், HRDF நிதியில் 30 கோடி ரிங்கிட் கையாடல் செய்யப்பட்டுள்ளது என எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அந்நிதியத்தின் நடவடிக்கைகளைக் காண்காணிக்க அச்செயற்குழுவை அமைக்க உத்தேசிக்கப்பட்டது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker