Latestமலேசியா

அம்னோவை விட்டு விலகினார் சைட் ஹமிட் அல்பார்!

ஈப்போ, ஜூன்.29 – ஒரு காலத்தில் அம்னோவின் அமைச்சர்களில் ஒருவராகவும், பலம் பொருந்திய ஜொகூர் மாநிலத் தலைவர்களில் ஒருவராகவும் வலம் வந்த டான்ஸ்ரீ சைட் ஹமிட் அல்பார் அம்னோவில் இருந்து விலகினார்.

அவர் விலகியது அம்னோவுக்கு ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

அம்னோவில் தலைவர்கள் மோசடிகளில் ஈடுபடுவதையும், வேண்டுமென்றே பிரச்சனைகளைத் தூண்டுவதையும் பார்த்து ஒன்றே நடக்காதது ஓல தம்மால் இருக்க முடியாது. அதனாலேயே அம்னோவிலிருந்து தாம் விலக முடிவெடுத்ததாக சைட் ஹமிட் அல்பார் கூறினார்.

“தன்னலம் கருதாத நாட்டின் சுதந்திரத்துக்கு வழிவகுத்த அம்னோவை விட்டு நான் விலகுவேன் என ஒரு நாளும் நினைத்ததில்லை. ஆனால் தற்போது கட்சியில் நடப்பதைப் பார்த்துக் கொண்டு இனிமேலும் என்னால் இக்கட்சியில் இருக்க முடியாது,” என சைட் ஹமிட் அல்பார் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.

அவர் தற்காப்பு அமைச்சராக மட்டுமில்லாமல் வெளியுறவு அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

சைட் ஹமிட், SPAD எனப்படும் தரைப் பொதுப் போக்குவரத்துக்கான ஆணையத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker