Latestமலேசியா

அரசியல் கடவுளாக இருக்க மாட்டேன் – கைரி

பட்டர்வர்த், ஜூன்.29- அம்னோவின் தலைவரானால் தம்மை கட்சி அரசியல் கடவுளாக நடத்தக் கூடாதென கைரி ஜமாலுடின் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

கட்சித் தலைவர் பொறுப்பில் இருப்பவர் தவறிழைக்க மாட்டார் என்பதில்லை. ஒரு வேளை தாம் தவறிழைத்தால் கட்சி உறுப்பினர்கள் தம்மை கேள்விக் கேட்க வேண்டும். அவ்வாறான குற்றம் கடிதல் முறை அம்னோவில் அவசியம் இருக்க வேண்டும் என கைரி அறிவுறுத்தினார்.

இதனிடையே, இதற்கு முன் கட்சி தலைமைத்துவம் புரிந்த தவறுகளுக்கு எதிராக தாம் குரல் எழுப்பத் தவறியதற்காக அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

நாளை நடைபெறவுள்ள அம்னோ தலைவர் தேர்தலில் முன்னாள் அம்னோ இளைஞர் அணித் தலைவர் பொறுப்பு வகித்த கைரி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker