Latestமலேசியா

குப்பை லாரி மோதி 9 வயது சிறுமி பலி!

ஷா ஆலாம், ஜூன்.29 – செக்சன் 27-இல் உள்ள ஜாலான் செலாயாங் 27/27a-வில், சாலையைக் கடக்க முயன்ற மூன்றாம் ஆண்டு மாணவி குப்பை லாரி மோதியதில் உயிரிழந்தாள்.

நேற்று பிற்பகல் 1.35 மணி அளவில் நடந்த அச்சம்பவத்தில், 9 வயது சிறுமி நோர் ஷாஸ்ரினா டாமியா முகமட்  நஸ்ருல் ரபிஸி தனது தோழியுடன் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

“கிள்ளானிலிருந்து  வந்து கொண்டிருந்த லாரி ஓட்டுனர் சம்பவம் நிகழ்ந்த சாலையில் வளைந்துள்ளார். அப்போது நோர் ஷாஸ்ரினா அவரது தோழியுடன் திடீரென சாலையைக் கடந்து சென்றுள்ளார். அவரின் தோழி சாலையைக் கடந்து சென்றார். ஆனால் நோர் ஷாஸ்ரினா தடுமாறி கீழே விழுந்தார்,” என ஷா ஆலாம் போலீஸ் தலைவர் பாஹாருடின் மாட் தாயிப் தெரிவித்தார்.

லாரி ஓட்டுனர் லாரியை நிறுத்திய போது நோர் ஷாஸ்ரினா எழுந்திருக்க முயற்சி செய்துள்ளார். எனினும், அதற்குள் லாரி பின்னோக்கி செலுத்தப்பட்டதால் அச்சிறுமியின் மீது குப்பை லாரியின் சக்கரம் ஏறியது என தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பாஹாருடின் மாட் கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவமனை உதவியாளர்கள் அச்சிறுமி உயிரிழந்ததை உறுதிபடுத்தினர். அதோடு, லாரி ஓட்டுனர் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிய வந்துள்ளது.

போலீசார் இவ்வழக்கை சாலைப் போக்குவரத்து சட்டம் (1987) பிரிவு 41(1) இன் கீழ் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker