Latestவிளையாட்டு

செனகல் தோல்வி; ஜப்பான் மகிழ்ச்சி! பெல்ஜியத்திடம் இங்கிலாந்து வீழ்ச்சி!

மாஸ்கோ, ஜூன். 29- உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் ‘ஜி’ பிரிவில் இடம்பெற்ற கடைசி தேர்வு ஆட்டத்தில் இங்கிலாந்து குழு 1-0 என்ற கோல்கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்ட போதிலும் அக்குழு 2ஆவது சுற்றுப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளது.

‘ஜி’ பிரிவில் முதல் இடத்தை பெல்ஜியம் பெற்றது. 2ஆவது இடத்தை இங்கிலாந்து பிடித்துள்ளது. இதன் வழி அடுத்து நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் பெல்ஜியம்குழு, ஜப்பான் குழுவிடனும் இங்கிலாந்து குழு, கொலம்பியாவுடனும் மோதவிருக்கின்றன.

நேற்று நடந்த ஆகக் கடைசியான ஆட்டங்களில் ஜப்பான் குழு போலந்திடம் 1-0 என்ற கோல்கணக்கிலும் செனகல் குழு கொலம்பியாவிடம் 1-0 என்ற கோல்கணக்கில் தோல்வி கண்டன.

இந்த ஆட்டத்தில் செனகல் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொலம்பியாவிடம் தோல்வி கண்டது அக்குழுவுக்கு மரண அடியாக அமைந்தது.

ஜப்பானும் செனகலும் ஒரே எண்ணிக்கையிலான புள்ளிகளையும் ஒரே எண்ணிக்கையிலான கோல்களையும் கொண்டிருந்ததால், அடுத்த சுற்றுக்குத் தேர்வு பெறும் குழுவை முடிவு செய்ய, அக்குழுக்கள் பெற்றிருந்த மஞ்சள் எச்ச்சரிக்கை கார்டுகளின் எண்ணிக்கை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அந்த வகையில் ஜப்பான் குழு 4 கார்டுகளைப் பெற்றிருந்த வேளையில், செனகல் 6 கார்டுகள் என்ற எண்ணிக்கையில் மஞ்சள் எச்சரிக்கைக் கார்டுகளைப் பெற்றிருந்ததால் அக்குழு 2ஆவது சுற்றுக்குள் நுழைந்தது. இதனால் கடைசி நேரத்தில் செனகல் கடும் ஏமாற்றத்திற்கு உள்ளான வேளையில், ஜப்பானியர்கள் ஏகப்பட்ட மகிழ்ச்சியில் திளைத்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker