Latestமலேசியா

சிரூலை மலேசியா கொண்டு வர, மரண தண்டனை ரத்தாகுமா?

கோலாலம்பூர், ஜூன்.29- மங்கோலிய மாடல் அழகி அல்தான் துயாவை கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப் பட்ட முன்னாள் போலீஸ்காரர் சிரூல் அஸ்ஹார் உமார் தற்போது ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப் பட்டுள்ளார்.

அவர் மீண்டும் மலேசியாவிற்கு கொண்டுச் செல்லப்பட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற அடிப்படையில், ஆஸ்திரேலியா அவரை நாட்டிற்கு அனுப்ப மறுத்து வருகிறது. ஆஸ்திரேலியா மரண தண்டனையை எதிர்க்கும் நாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரூலை ஆஸ்திரேலியாவின் அனுமதியோடு மீண்டும் மலேசியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்றால், மலேசியாவில் மரண தண்டனை ரத்து செய்யப் பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா எதிர்பார்க்கிறது என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

“சிரூலை இங்கு அழைத்து வர வேண்டும் என்றால், மரண தண்டனை தொடர்பிலான மலேசியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் நிகழ்த்த வேண்டும். நாட்டின் மரண தண்டனை குறித்த நிலைப்பாட்டில் திருத்தம் மேற்கொள்ளப் பட வேண்டுமா அல்லது மரண தண்டனை முற்றாக அகற்றப் பட வேண்டுமா என்பது குறித்து நாம் கலந்தாலோசிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

சிரூலுக்கு மரண தண்டனையை விதிக்க வேண்டிய அவசியத்தில், மலேசிய போலீசார் அவரை தேடும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவில் இருந்து அவரை கைது செய்ய அந்நாடு ஒப்புதல் வழங்காது என்று ஆஸ்திரேலிய தூதர் ஆண்ட்ரூ லேக் சொன்னார்.

அல்தான் துயா கொலை வழக்கு தொடர்பில், அந்த மாடல் அழகியை கொலை செய்யுமாறு தமக்கு ஆணைப் பிறப்பித்த அந்தச் ‘செல்வாக்கு’ மிகுந்த நபர் குறித்த தகவலை தாம் வெளியிட தயாராக இருப்பதாகவும், ஆனால், அதற்கு பதிலாக தமக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று சிரூல் அண்மையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் தொடர்பில், அவர் மலேசியப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிற்கும் தனிப்பட்ட கடிதம் ஒன்றை எழுதி, அக்கடிதத்தை முன்னாள் அம்னோ கிளைத் தலைவர் டத்தோஶ்ரீ கைரூடின் அபு ஹசானிடம் கொடுத்து அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்கது,

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker