Latestமலேசியா

ஜூலை முதல் நிறுவனங்களுக்கு மின்கட்டணம் அதிகரிப்பு!

கோலாலம்பூர், ஜூன். 29- எரிபொருள் மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதால், ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை, நாட்டிலுள்ள நிறுவனங்கள், மின்சாரக் கட்டணம் கூடுதலாகச் செலுத்த வேண்டும் என்று தெனாகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மின்சக்தி வாரியத்தின் இந்தக் கூடுதல் கட்டண விதிமுறையால், வீடுகளில் மின்சக்தியை உபயோகிக்கும் மக்களுக்கு எவ்வித தொல்லைகளும் ஏற்படாது என்று தெனாகா நேஷனல் தெரிவித்துள்ளது.

தெனாகா நேஷனல் நிறுவனத்தின் ஏற்றத்தாழ்வு செலவினங்களைக்ச் கடந்து செல்லும் வழிமுறையின் கீழ் (ஆறு மாதங்களுக்கு இந்தப் புதிய கட்டண முறையை நிறுவனங்களின் மீது அமல்படுத்துவதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியது.

“300 கிலோவாட்/1 மணி நேரம் குறைவான மின்சக்தியை உபயோகிக்கும் மக்களுக்கு இந்தப் புதிய கட்டண முறையால் எவ்வித பாதிப்பும் நேராது. 300 கிலோவாட்டிற்கு மேலான மின்சக்தியை உபயோகிக்கும் வீடுகளுக்கான (கூடுதல்) கட்டணத்தை, மின்சார தொழில் நிதியம்செலுத்தி விடும்” என்று தெனாகா நேஷனல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker