Latestமலேசியா

தாயிப்புக்கு எதிராக புகார் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்- மகாதீர்

ஜகார்த்தா, ஜூன்.29- சரவாக் முன்னாள் முதல்வர் அப்துல் தாயிப் அப்துல் தாயிப் மஹ்முட் மாநில அரசு பணத்தை ஊழல் செய்துதான் சொத்து சேர்த்திருக்கிறார் என பரவலாகப் பேசப்பட்டு வந்தாலும், அவர் மீது இதுவரை ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்படவில்லை. முறையான புகார் இல்லாமல் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாதென துன் மகாதீர் கூறியுள்ளார்.

ஒருவேளை சரவாக் மக்கள் தாயிப் மஹ்முட் மீது புகார் வழங்கினால், அதை அடுத்து அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

1எம்டிபி ஊழல் விவகாரம் தொடர்பில் பக்காத்தான் ஹராப்பான் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகள் பாராட்டக்குரியது. அதே வேளை, சரவாக்கில் பெருமளவில் ஊழல் செய்த தாயிப் மஹ்முட்டுக்கு எதிராகவும் பக்காத்தான் அரசு நடவடிக்கை எடுக்கும் என சரவாக் மக்கள் எதிர்ப்பார்ப்பதாக அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஜகார்த்தாவில் துன் மகாதீரிருடனான கேள்வி பதில் அமர்வில் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker