Latestமலேசியா

நஜிப் கைது எப்போது?

கோலாலம்பூர், ஜூன்.29- முன்னாள் பிரதமர் நஜிப் அடுத்த வாரம் கைதாகக் கூடும் என்ற தகவல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது ‘கைது நடக்கலாம்’ என புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் அமர் சிங் கோடிக்காட்டினார்.

நஜிப்புக்கு சொந்தமான வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து அறிவிக்க அடுத்த வாரம் மீண்டும் ஒரு செய்தியாளர் கூட்டம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நஜிப் அடுத்த வாரம் கைதாகலாம் என்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்நிலையில், நேற்று ஜகார்த்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் துன் மகாதீர், 1எம்டிபி ஊழல் விவகாரம் தொடர்பில் நஜிப் கூடிய விரைவில் குற்றஞ்சாட்டப்படுவார் என தெரிவித்துள்ளார்.

நஜிப் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், கைகடிகாரங்கள், கைப்பைகள் ஆகிய விலை உயர்ந்த பொருட்களின் மொத்த மதிப்பு 100 கோடி ரிங்கிட் தேறும் என நேற்று முன் தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமர் சிங் அறிவித்திருந்தார்.

இருப்பினும், மலேசியாகினிக்கு வழங்கிய சிறப்பு பேட்டியொன்றில் நஜிப் இதனை முற்றிலும் மறுத்துள்ளார். போலீஸ் கைப்பற்றிய பொருட்களில் பெரும்பாலனவை அன்பளிப்பாக கிடைத்தவை என அவர் கூறியுள்ளார்.

போலீஸ் இன்னும் 295 கைப்பைகளின் மதிப்பை மதிப்பீடு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker