Latestமலேசியா

மஇகா, மசீச வங்கிக் கணக்குகளையும் முடக்குக! –ஜசெக எம்.பி

.கோலாலம்பூர், ஜூன்.29- அம்னோ தலைமையகம், சிலாங்கூர் அம்னோ ஆகியவற்றின் வங்கிக் கணக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முடக்கியிருப்பதைத் தொடர்ந்து, தேசிய முன்னணியின் இதர நான்கு கட்சிகளான மசீச மற்றும் மஇகாவின் வங்கிக் கணக்குகளும் முடக்கப் பட வேண்டும் என்று ஜசெக கட்சி உறுப்பினர் லிம் லிப் எங் கேட்டுக் கொண்டுள்ளார்.

1எம்டிபி நிதி முறைக்கேடு விவகாரம் தொடர்பிலான விசாரணைக்காக, தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளான மசீச, மஇகா, சபா லிபரல் ஜனநாயகக் கட்சி மற்றும் சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி ஆகியற்றின் வங்கிக் கணக்குகளை எம்.ஏ.சி.சி முடக்க வேண்டும் என்று கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் வலியுறுத்தினார்.

அம்னோவைப் போன்றே, முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை இந்த நான்கு கட்சிகளுக்கும் பெற்றிருக்கக்கூடும்.

நஜிப்பின் அந்த வங்கிக் கணக்கு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் பட்சத்தில், இந்த நான்கு கட்சிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப் பட வேண்டும் என்று அவர் விவரித்தார்.

“1எம்டிபிக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சிலவற்றின் நிதி வளம் குறித்து விசாரணை தொடங்கப்படும் என்று கடந்த வாரம் தெரிவிக்கப் பட்டது. அதுமட்டுமல்லாது, தேசிய முன்னணியின் ‘பங்காளி’களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பண பரிமாற்றம் செய்யப் பட்டுள்ளது தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப் படும் என்று அவர்கள் தெரிவித்தனர்” என்று லிம் சொன்னார்.

விசாரணைக்கு உதவும் வகையில், அந்த அரசியல்வாதிகள் மற்றும் பங்காளி கட்சித் தலைவர்களின் வங்கிக் கணக்கும் முடக்கப் பட்டு விட்டனவா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker