Latestமலேசியா

மலேசியா-இந்தோ. கூட்டு முயற்சியில் மீண்டும் ‘ஆசியான் கார்’!

கோலாலம்பூர், ஜூன்.29- மலேசியா மற்றும் இந்தோனிசியா நாடுகளுக்கு இடையிலான கூட்டு முயற்சியில், ‘ஆசியான் கார்’ புத்துயிர் பெற்று நிறுவப்படும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

இந்தோனிசிய அதிபர் ஜோகோ விடோடோ மற்றும் பிரதமர் மகாதீர் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. அந்தக் கலந்துரையாடலின் போது, ‘ஆசியான் காரை’ உருவாக்க இரு நாடுகளும் ஒன்றாக சேர்ந்து செயல்படலாம் என்று தாங்கள் கருத்து பரிமாறிக் கொண்டதாக மகாதீர் கூறினார்.

கடந்த 2015-ஆம் ஆண்டில் புரோட்டோன் மற்றும் சிடி ஆடி பெர்காசா சித்ரா லெஸ்தாரி ஆகிய நிறுவனங்கள், உடன்பாடு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, பிற்காலத்தில் ‘ஆசியான் கார்’ தயாரிக்கப் படும் என்று (அப்போதைய) புரோட்டோன் நிறுவனத்தின் உரிமையாளரான மகாதீர் தெரிவித்தார்.

ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த முயற்சி கைவிடப் பட்டது.கடந்த 2015-ஆம் ஆண்டில் ஜோகோ மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்ட போது, அவர் புரோட்டோன் காரை ஓட்டி பார்க்க வேண்டும் என்று தாம் கேட்டுக் கொண்டதாக மகாதீர் சொன்னார்.

“ஆனால், ஜோகோவை பயணிகள் சீட்டில் அமர்ந்துக் கொண்டார். நான் தான் அந்தக் காரை தொடரலை போன்ற சாலையில் ஓட்டிச் சென்றேன். ஒரு நாட்டின் அதிபரை காரில் வைத்துக் கொண்டு, வேகமாக செல்ல நான் பயந்தேன்” என்று மகாதீர் தெரிவித்தார்.

மகாதீரின் அந்தப் பேச்சைக் கேட்டு, ஜோகோ பலமாக சிரித்தார். அதன் பின்னர், “மகாதீர் 180 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற போதிலும், நான் பயப்படவில்லை. காரணம், ஓட்டுவது மகாதீர் ஆயிற்றே!” என்று ஜோகோ பதிலளித்தார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker