Latestமலேசியா

புழுக்கள்; மேலும் 6 சார்டின் வகைகள் மீட்பு!

கோலாலம்பூர், ஜூன்.29- சுகாதார அமைச்சு, மேலும் 6 வகை சார்டின் டின் பொருட்களை மீட்டுக் கொண்டுள்ளது. அவற்றில் புழுக்கள் இருந்தது உறுதிப்படுத்தப் பட்டதை தொடர்ந்து அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

‘சிந்தா, சீ பிரேஷ், எச்.எஸ் பிரேண்ட், கிங் கப், பிந்தாங், தீசி போய்’ ஆகிய சார்டின் உணவுப்பொருட்களில்தான் புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படும் இந்த சார்டின் டின் பொருட்கள் கண்காணிக்கப்படும் என அவர் கூறினார்.

1983-ஆம் ஆண்டு உணவுச் சட்டத்திற்கு உட்படாத பொருட்களின் மீது அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு லட்சம் ரிங்கிட்டுக்கு மேற்போகாத அபராதம் அல்லது அதிகபட்சம் 10 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker