Latestமலேசியா

லோரியால் இழுத்துச் செல்லப்பட்டது மோட்டார் சைக்கிள்! இளைஞர் பலி!

கோத்தா கினாபாலு, ஜூன்.29 -இங்கு தாமான் சன்தேக் அருகே உள்ள ஜாலான் லின்தாசில் சென்றுக் கொண்டிருந்த மோட்டார்சைக்கிளோட்டி  லாரியுடன் மோதிய பின்னர் லோரினால் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்தார்.

காலை 9.20 மணி அளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் பலத்த காயத்துக்கு இலக்கான 30 வயது கைருல் ஹிஷாம் ஷாம் ஹரி சம்பவ இடத்திலேயே பலியானார்.

சம்பவமன்று கைருலின் மோட்டார் சைக்கிள், டொயோட்டா வியோஸ் காரின் மீது உரசிய பின்னர் லாரி ஒன்றை மோதியது.  பின்னர் லோரியினால்  மோட்டார் சைக்கிள் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

அவ்விபத்து நிகழ்ந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த குயின் எலிசபெத் மருத்துவமனையைச் சேர்ந்த அவசர மருத்துவ உதவிக் குழு  கைருல் உயிரிழந்ததை உறுதிபடுத்தியதாக கோத்தா கினாபாலு மாவட்ட போலீஸ் தலைவர் சந்திரா தெரிவித்தார்.

போலீசார் இவ்வழக்கை சாலைப் போக்குவரத்து சட்டம் (1987) பிரிவு 41(1) இன் கீழ் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker