Latestமலேசியா

PNB தலைவராகடான்ஶ்ரீ ஸெட்டி நியமனம்!

கோலாலம்பூர், ஜூன்.29 – பிஎன்பி எனப்படும் பெர்மோடாலான் நேசனல் பெர்ஹாட்டின் புதிய தலைவராக முன்னாள் பேங்க் நெகாரா ஆளுநர் டான்ஸ்ரீ டாக்டர் ஸேட்டி அக்தார் நியமிக்கப்பட்டார். அவர் ஜூலை 1-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக பிஎன்பி.யின் தலைவராக நியமிக்கப்படுவார் என பிஎன்பி தனது அறிக்கையில் தெரிவித்தது.

பிஎன் பி தலைவராக இருந்து டான்ஸ்ரீ அப்துல் வாஹிட் ஓமார் நேற்று பதவி விலகியதைத் தொடர்ந்து டான்ஸ்ரீ டாக்டர் ஸெட்டி அக்தார் அசிஸ் வாஹிட் அப்பதவியை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் நாள் பிஎன்பியின் தலைவராக பதியேற்ற வாஹிட் ஓமார், முன்னாள் அமைச்சரும், மலாயன் வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பதவி வகித்தவர் ஆவார்.

இன்று மாலை நடைபெற்ற அவரின் பிரியாவிடை விருந்தில் தாம் சுயமாகவே இந்தப் பதவி விலகல் முடிவை மேற்கொண்டதாகவும் நாளை முதல் அது அமலுக்கு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த 2015-ஆம் ஆண்டு பிஎன்பி.யை விட்டு விலகிய ஸெட்டி அக்தார், 16 ஆண்டுகளாக நாட்டின் மத்திய வங்கியான பேங்க் நெகாராவை திறம்பட வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker