Latestஉலகம்

இலங்கையில் தமிழர் தாயகம் விரைவில் அழியுமா? அதிர்ச்சியில் மக்கள்

கொழும்பு, ஜூன்,30-  இலங்கைப் போரினால் பேரழிவை சந்தித்த தமிழர் தாயகத்தில் வாழும் மக்கள் மற்றுமொரு பேரழிவைச் சந்திக்கவுள்ளதாக உலக வங்கி எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

அதிகரித்து வரும் வெப்பம் மற்றும் காலம் மாறிய மழை வீழ்ச்சி காரணமாக இலங்கை மோசமாக பாதிக்கப்பட இருப்பதாக குறிப்பிடும் உலக வங்கியின் புதிய அறிக்கை அதிலும் மிகவும் மோசமான தாக்கத்தை தமிழர் தாயகமான வடகிழக்கு பிரதேசமே பெரிதும் பாதிக்கப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் காரணமாக தெற்காசிய நாடுகளின் வாழும் மக்களின் எதிர்காலம் எவ்வாறான மாற்றத்தை காணவுள்ளது என்பது தொடர்பில் உலக வங்கி புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

125 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் காலநிலை மாற்றம் காரணமாக 2050 ஆம் ஆண்டில் இலங்கை, இந்தியா , பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக சீர்குலையும் என்றும் உலக வங்கி எச்சரித்துள்ளது.

அதிலும் மோசமான பாதிப்பை எதிர்நோக்கியுள்ள இலங்கையில் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களான தமிழர் தாயகமே பெரிய அழிவை எதிர்நோக்கயுள்ளதாக அது கூறியுள்ளது.

இதனால் 2050-இல் இலங்கையின் வாழ்க்கை தர மட்டம் ஏழு வீதத்தால் வீழ்ச்சியடையும் போது அக்கினி வெயில் கோரத்தாண்டவம் ஆடும். யாழ் மாவட்டம் உட்பட வடமாநிலத்திலும் ஐந்து மாவட்டங்களில் வாழ்க்கை தர மட்டம் 11% வீழ்ச்சியடையும் என்று எச்சரித்துள்ளது.

இந்நிலையில் காலநிலை மாற்றமும் அந்த மக்களை பாதிக்கவுள்ளதால் அவர்களால் இன்னும் பல தசாப்தங்களுக்கு மீள எழும்ப முடியாத நிலை ஏற்படும் என்றும் உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.

இந்நிலையிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் ஸ்ரீலங்காவிற்கு ஐயாயிரம் கோடி அமெரிக்க டாலர் நட்டத்தை எதிர்நோக்க நேரிடும் என்றும் உலக வங்கி எச்சரித்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker