Latestமலேசியா

சிரூலுக்காக மரண தண்டனையை ரத்து செய்யாதீர்! – ராம்கர்ப்பால் சிங்

கோலாலம்பூர், ஜூன்.30- மொங்கொலிய மாடல் அழகி அல்தான்தூயா கொலையாளி சிரூல் அஸார் உமாரை ஆஸ்திரேலியாவில் கொண்டுவருவதற்காக மலேசியாவில் மரண தண்டனையை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளதை புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான ராம்கர்ப்பால் சிங் எதிர்க்கிறார்.

நாட்டில் மரண தண்டனையை ரத்து செய்வது கொள்கை அடிப்படையில் செய்யப்பட வேண்டுமே தவிர, ஒரு தனிநபருக்காக செய்யக் கூடாதென அவர் கூறியுள்ளார்.

அல்தான்துயா கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் போலீஸ்காரர் சிரூல் தற்போது ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சிரூலை மலேசியாவிற்கு கொண்டு வந்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற அடிப்படையில், ஆஸ்திரேலியா அவரை அனுப்ப மறுத்து வருகிறது. ஆஸ்திரேலியா மரண தண்டனையை எதிர்க்கும் நாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரூலை ஆஸ்திரேலியாவின் அனுமதியோடு நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றால், மலேசியாவில் மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா எதிர்பார்க்கிறது என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா நேற்று கூறியிருந்தார்.

அதன் தொடர்பில் மரண தண்டனையை ரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் ஆராயுமென அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதையடுத்து ராம்கர்ப்பால் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker