Latestமலேசியா

தொட்டில் கயிற்றில் மாட்டி உயிரிழந்த 8 வயது சிறுவன்

தெனோம், ஜூன். 30 – கம்போங் மகாகாகாஸ் உள்ள ஒரு வீட்டில் சுங்வா சீனப் பள்ளியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவன் க்ரிஸ் டேனி தொட்டில் கயிற்றில் மாட்டி பரிதாபமாக உயிரிழந்தான்.

நேற்று மாலை 4.30 மணி அளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தின்போது, டேனியின் பெற்றோர் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, டேனியின் சகோதரன் வரவேற்பு அறைக்கு ஓடிய சத்தம் கேட்டு டேனியின் தந்தை எழுந்து வந்து பார்த்தபோது, டேனி தொட்டில் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்திருக்கிறான்.

உடனே ஓடிச் சென்று கயிற்றில் மாட்டிக் கொண்டிருந்த தனது மகனைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார் டேனியின் தந்தை. ஆனால், மருத்துவமனையை அடைவதற்கு டேனியின் உயிர் பிரிந்தது.

“டேனியின் தம்பிக்கு மூன்று வயதாகிவிட்டதால் அத்தொட்டிலை அதிகம் பயன்படுத்துவதில்லை. டேனி அத்தொட்டிலை விளையாடுவதற்கு பயன்படுத்துவது எனக்குத் தெரியாது. இல்லையெனில் எப்பவோ அதை தூக்கி எறிந்திருப்பேன். டேனி அத்தொட்டிலில் அடிக்கடி விளையாடுவான் என்று என் மூத்த மகன் கூறிய பின்னர்தான் எனக்கேத் தெரியும்,” என டேனியின் தந்தை ஜெப்ரி கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker