Latestமலேசியா

புத்ராஜெயா ஹோல்டிங்ஸ் உயர் நிர்வாகி ஜாமினில் விடுதலை

புத்ராஜெயா, ஜூன்.30- புத்ராஜெயாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் 30 கோடி ரிங்கிட் மதிப்பிலான வீடமைப்புத் திட்டத்தில் நிகழ்ந்துள்ள அதிகார முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட புத்ராஜெயா தலைமைச் செயல்முறை அதிகாரியை புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியின் தடுப்புக் காவலை நீட்டிக்க ஊழல் தடுப்பு ஆணையம் கேட்டுக்கொள்ளாததை அடுத்து, அந்த அதிகாரியை ஐம்பதாயிரம் ரிங்கிட் ஜாமின் தொகையிலும், ஒருவரின் உத்தரவாத்தின் பேரிலும் விடுவிக்க மாஜிஸ்திரேட் முகமட் அப்டு முகமட் ஹாபிட்ஸ் அனுமதியளித்தார்.

டத்தோ பட்டத்திற்குரிய அந்த உயர் நிர்வாகி கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார். மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

சம்பந்தப்பட்ட வீடமைப்புத் திட்டத்தை வழக்கம் போல குத்தகை அடிப்படையில் ஒரு மேம்பாட்டளுக்கு வழங்கி இருக்கிறார்கள். ஆனால், வேண்டுமென்றே சதி செய்து அந்த மேம்பாட்டளரை வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்ள முடியாமல் செய்திருக்கிறார்கள்.

பின்னர், குத்தகை வேறொரு மேம்பாட்டளருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அப்புதிய மேம்பாட்டாளர் கைதான தலைமைச் செயல்முறை அதிகாரிக்கு வேண்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker