Latestமலேசியா

பெற்ற தாயை கொலை செய்த கொடூரம் : பந்திங்கில் சோகச் சம்பவம்!

பந்திங், ஜூன்.30- தாமான் லாங்காட் உத்தாமா 3-இல், பெற்ற தாயைக் கொலை செய்த 20 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலை இல்லாத அந்த இளைஞன், நேற்று பிற்பகல் மணி 2.10 அளவில் தனது 50 வயது தாய் மட்சியா முகமட் யூசோப்பின் தலைப் பகுதியைக் கத்தியால் குத்தி தாக்கியிருக்கிறான்.

சம்பவத்தின்போது வீட்டில் அந்த இளைஞனும், கொலையுண்ட மட்சியாவும் மட்டும்தான் இருந்திருக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துவிட்டு மட்சியாவின் கணவரும், இளைய மகனும் வீடு திரும்பியபோது சம்பந்தப்பட்ட இளைஞன் கையில் இரத்தக் கறையோடு வீட்டை விட்டு ஓடியிருக்கிறான். அவனைத் துரத்திச் சென்ற மட்சியாவின் கணவர் வீட்டில் என்ன நிகழ்ந்தது என அறிய பாதியிலேயே வீடு திரும்பியிருக்கிறார்.

வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது மட்சியா சமையல் அறையில் இறந்து கிடந்ததாகவும், பக்கத்தில் கத்தி இருந்ததாகவும் அவரது கணவர் போலீசிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நிகழ்ந்து ஒரு மணி நேரத்தில், அந்த இளைஞனை வீட்டிலிருது 50 மீட்டர் தூரத்தில் உள்ள ஓர் இடத்தில் போலீசார் கைது செய்தனர். கைது செய்தபோது அவன் மனநிலை சரியில்லாதவன் போல இருந்ததாக போலீஸ் தெரிவித்தனர்.
அதனால், அவன் போதைப்பொருள் உட்கொண்டிருந்தானா இல்லையா என்பதை போலீஸ் விசாரித்து வருகிற௹ஊ.

மட்சியாவின் உடல் சவப்பரிசோதனைக்காக பந்திங் மருந்த்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker