Latestமலேசியா

வெளிநாட்டு தூதர்கள் பலரின் பதவிகள் பறிபோகின்றன!

கோலாலம்பூர், ஜூன். 30- ன்பு இருந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு தூதர்கள் பலர் தங்களின் பதவிகளை துறக்கவேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தினால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இந்தோனிசியாவுக்கான மலேசியத் தூதர் டத்தோஶ்ரீ ஸாரின் முகம்மட் ஹாசிமின் பதவிக்காலம் உடனடியாக முடிவுக்கு வருகிறது. அவர் உடனடியாக நாடு திரும்புகிறார். பல பெட்டிகளில் நிரப்பட்ட அவரது உடமைகள், ஏற்கெனவே கோலாலம்பூரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என்று தெரிய வந்துள்ளது.

ஸாரின் முன்னாள் பாயான் பாரு எம்.பி.ஆவார். இவர் பிகேஆர் உறுப்பினராக இருந்து பின்னர் அம்னோவுக்கு தாவி தூதராகப் நியமிக்கப்பட்டிருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று வத்தினுக்கான மலேசியாவின் முதல் தூதராக விளங்கிய டான்ஶ்ரீ பெர்ணாட் டொம்போக், பதவிக் காலம் முடிவுக்கு வந்து விட்டது. இவர் அடுத்த வாரம் நாடு திரும்பி விடுவார்.

பின்லாந்துக்கான மலேசியத் தூதரும் டான்ஶ்ரீ கேவியசின் துணைவியாருமான புவான்ஶ்ரீ பிளாஞ்சே, தைவானின் மலேசிய நட்புறவு மற்றும் வர்த்தக மையத் தலைவர் டத்தோ அடெலின் லியோங், புருணைக்கான மலேசியத் தூதர் டத்தோ குலாம் ஜெலானி ஆகியோரும் பதவி விலகவுள்ளனர் என தெரிய வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker