Latestஉலகம்

அமெரிக்க உளவாளிக்கு புகலிடம் தர மறுக்கிறது ஜெர்மனி!

மாஸ்கோ, ஜூலை.1- அதிபர் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருக்கும் சமயத்தில் தனக்கு ஜெர்மனி புகலிடம் கொடுப்பது எளிதாக இருந்திருக்கும். ஆனால் ஏஞ்சலா மார்க்கல் தனக்கு புகலிடம் அளிக்க மறுப்பது ஏமாற்றமளிக்கிறது என்கிறார் எட்வர்ட் சுனோடன்.

இவர் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் இரகசியங்கள் சிலவற்றை வெளியிட்டதற்காக அமெரிக்காவால் தேடப்படும்
உளவாளியான இவர் தற்போது ரஷ்யாவில் பதுங்கி இருக்கிறார்..

2013 முதல் ரஷ்யாவில் வசித்து வரும் எட்வர்ட் சுனோடன், அமெரிக்கா அதிபர்- ரஷ்ய அதிபருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றால்
தன்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்குமாறு அதிபர் டிரம்ப்- புடினைக் கேட்கலாம் என அஞ்சுகிறார்.

இதனால் ஜெர்மனியிடம் புகலிடம் கோரிய அவரது கோரிக்கையை ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்க்கல் ஏற்றுக் கொள்ளவில்லை. தான் வெளியிட்ட இரகசியங்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனக் கூறும் எட்வார்ட் சுனோடன், இனி தாம் பயங்கர விளைவுகளைக் கொண்ட வாழ்வை எதிர்கொள்ளப் போவதை அறிந்துள்ளதாகவும் கூறுகிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடம் பெயர்வதற்கு எட்வர்ட் சுனோடன் விருப்பம் தெரிவித்த நிலையில், சட்டப்பூர்வமாக ஐரோப்பாவிற்குள் நுழைவது எளிது என்றாலும் அரசியல் ரீதியாக அதை அனைவரும் தடுத்து விட்டார்கள். இன்னும் ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிடம் பேச்சு வார்த்தைகள் நடத்த தயாராக இருப்பதாக ஜெர்மனிலிருக்கும் அவரது வழக்கறிஞரான
வோல்ப் கேங்கிடம் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker