Latestமலேசியா

அம்னோ தலைமைச் செயலாளர் பொறுப்பை மறுத்தார் கைரி

கோலாலம்பூர், ஜூலை.1- அம்னோ தேசியத் தலைவர் ஸாஹிட் ஹமிடி தனக்கு வழங்க முன்வந்த  கட்சித் தலைமைச் செயலாளர் பொறுப்பை கைரி வேண்டாமென மறுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் கவனம் செலுத்தவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.எனினும், கட்சிக்கு எப்போதுமே உறுதுணையாக இருப்பேன் என அவர் உறுதி அளித்துள்ளார்.

அம்னோவின் முக்கியத் தலைவர்களாக இருந்தவர்களில் ஒருவரான கைரிக்கு இப்போது கட்சியில் எந்த உயரிய பதவியும் இல்லை.

தொடக்கத்தில், அம்னோவின் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடவிருப்பதாக கூறியவர், கடைசி நேரத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிடவிருப்பதாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தார்.

42 வயது கைரி, கட்சியின் இரு மூத்தத் தலைவர்களுடன் அந்த பதவிக்கு நேற்று போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker