Latestமலேசியா

CIMB தலைவர் பதவி விலகலா? -நஸ்ரி ரசாக் விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 1- தமது சி.ஐ.எம்.பி. குழுமத்தின் தலைவர் பதவி 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிவடைகிறது என்றும் அதனை மேலும் நீட்டிப்பதா, இல்லையா? என்பது குறித்து தாம் இன்னும் முடிவு செய்யவில்லை என டத்தோஸ்ரீ நஸிர் ரசாக் கூறினார். இவர் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது நிலை குறித்து யாரும் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார். சி.ஐ.எம்.பி. தலைவர் பதவியை அதன் பங்குதாரர்கள், வாரியக்குழு மற்றும் பேங்க் நெகாராவே முடிவு செய்வர். நான் அப்பதவியிலிருந்து விலக வேண்டும் என்று யாராவது பரிந்துரை செய்தால் தாம் நிச்சயம் அப்பதவியிலிருந்து விலகிவிட வேண்டும் எனவும் அவர் சொன்னார்.

அதோடு, கடந்த 4 ஆண்டுகளாக அப்பதவியை வகித்து வரும் அவர் சி.ஐ.எம்.பி. நிறுவனத்தின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து சேவையாற்றப் போவதாக கூறினார்.

இதனிடையே, சி.ஐ.எம்.பி. குழுமத்தின் தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ நஸிர் ரசாக்கின் இடத்தை நிரப்புவதற்கு வேறு ஒருவர் தேடப்பட்டு வருகிறார் என நேற்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றாலும் அச்செய்தி குறித்து கருத்துரைக்க வேண்டியது தனது கடமையாகும் என்றும் நஸிர் ரசாக் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker