Latestமலேசியா

இந்திய விசா கட்டணம்: மலேசியா எதிர்க்க வேண்டும்! -பிகேஆர் சிவமலர்

கோலாலம்பூர், ஜூலை.2- இந்தியாவிற்கு செல்லவிரும்பும் மலேசியர்களுக்கான இந்தியா விசா கட்டண உயர்வை மலேசிய அரசாங்கம் எதிர்க்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் மகளிர் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

இதேப் போன்று, கடந்தாண்டு இந்திய அரசாங்கம் மலேசியர்களுக்கான விசா கட்டணத்தை உயர்த்திய போது, பலர் தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர்.

முந்தைய அரசாங்கத் தலைவர்களும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்ததால் அப்போது விசா கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று பக்காத்தான் ஹராப்பான் மகளிர் பிரிவின் சட்டப் பிரிவுத் தலைவர் ஜி.சிவமலர் சுட்டிக் காட்டினார்.

“முந்தைய அரசாங்கத் தலைவர்களைப் போன்றே, இந்தியாவின் இந்தக் கட்டண உயர்வை பக்காத்தான் அரசாங்கத்தின் தலைவர்களும் எதிர்க்க வேண்டும்” என்ற அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவிற்கு சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல், இந்தியாவுடன் சமய ரீதியில் உறவுக் கொண்டுள்ள மலேசியர்களுக்கு இந்த விசா கட்டண அதிகரிப்பு தலைவலியாக அமையும் என்று சிவமலர் கருத்துரைத்தார்.

இந்தியாவிலுள்ள தங்களின் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று, அங்கு தங்களின் சமய விழாக்களை கொண்டாடி வரும் மலேசிய இந்தியர்கள், இந்தக் கட்டண உயர்வால் பாதிப்படைவர் என்றும், அவர்களின் சமய நிகழ்ச்சிகளும் தடை படும் என்றும் அவர் விளக்கினார்.

“புனித யாத்திரைகளை செலுத்த ஏற்கனவே பலர் தங்களின் பயணத்திற்கான விமான டிக்கெட்டுகளை வாங்கியிருப்பர். விசா கட்டணம் அதிகரிப்பால், அவர்களின் பயணங்கள் தடைபடக் கூடாது. அது நியாயமல்ல” என்று அவர் சொன்னார்.

இந்தியாவிற்கான இ-விசாவின் கட்டணம், ரிம.200-லிருந்து ரிம.320-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முகப்பிடங்களில் பெறப்படும் விசாக்களின் கட்டணம், ரிம. 462.45-ஆக உயர்ந்துள்ளது. இந்த விசா கட்டண அதிகரிப்பு நேற்றிலிருந்து அதிகாரப்பூர்வமாக அமலில் உள்ளது.

மலேசியா மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையிலாக நல்ல உறவை இந்திய அரசாங்கம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது இந்த விசா கட்டண அதிகரிப்பின் வாயிலாக தெள்ளத் தெளிவாக தெரிகிறது என்று மீரா எனப்படும் சிறுபான்மை உரிமைகளுக்கான கட்சி சாடியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker